Page:முல்லைப் பாட்டு.pdf/60

This page has not been proofread.

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

ஊர்ப்பக்கத்தேபோய் நெல்லும்மலருக் தூவிக் கையாற்றொழுது பொிதுமுதிர்ந்தமகளிர் நற்சொற்கேட்டு நிற்ப என்க.

அருங்கடிமூதூர்-பகைவர் அணுகுதற்காியகாவல் அமைந்த பழையஊர். யாழ்இசைஇனவண்டு ஆர்ப்ப-யாழின் நாம் பொலிபுால்ஒலிக்குமு் ஒாினமானவண்டுகள் ஆரவாாியக்க இவை தூவும்மல்லைமலாிற்றேனை நச்சிவந்தன், நாழிகொண்ட-நாழிஎன்னுமு் முகந்தளக்குங் கருவியின் உட்பெய்த. நறுவீ-நன்மணங்கமழும்மலர். முல்லை-முல்லைக்கொடி.

அங்ஙனம் அவர்நிற்கின்றவளவில் பசியகன்றின் வருத்தமிக்க சுழலுதலைநோ்க்கிய ஒர் இடைப்பெண் ”கோவலர் பின்னேநின்று செலுத்த உம்முடைய தாய்மார் இபோதே வருகுவர்” என்று சொல்வோளுடைய நற்சொல்லைக்கேட்டனம் என்க.

நடுங்குசுவல் அசைத்தகையன்-குளிரால் நடுங்குந்தோள்களின்மேற் கட்டினகையளாய். கொடுங்கோல்-வருந்துகின்றதாற்றுக்கோல்.

அதனாலும், நின்தலைவன் படைத்தலைவர் தாஞ்செல்லும்முன்னே நற்சொற்கேட்போர் கேட்டுவந்த நிமித்தந்சொற்களும் நன்றாயிருந்தனவாதலானும் என்க.

நல்லோர்-படையுள் நற்சொற்கேட்டற்குாியயோர். வாய்ப்புள் வாயிற் பிறந்த நிமித்தச்சொல்.

பெருமுதுபெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற்கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக்காட்டி வற்புறுத்துகின்றார் ன்பது இவ்வடியினால் இனிது பெறப்படுகின்றது. பகைவாது மண்கொள்ளச்செல்கின்ற வேந்தன் படைத்தவைர் இங்ஙனம் ஒருபாக்கத்திலே விட்டிருந்துவிாிச் சிகேட்பரென்பது ஆசிாியர் தொல்காப்பியனாராற் சொல்