Page:முல்லைப் பாட்டு.pdf/69

This page has not been proofread.

விளக்க உரைக் குறிப்புகள் [குகூ] களிற்றியானைகளையும், யானைகளின் பரிய தும்பிக்கை அற்று விழத் தாம் அணிந்த வஞ்சிமாலைக்கு நல்வெற்றி விளைவித்துச்செஞ்சோற்றுக்கடன் கழித்து இறந்த மறவரையும் நினைத்தும் காவலாயிட்ட தோற்சட்டையினையுங் கிழித்துக்கொண்டு அம்புகள் குளித்தமையால் செவியைச் சாய்த்துக்கொண்டு தீனி எடாமல் வருந்துங்குதிரைகளை நினைந்தும் ஒரு கையைப்படுக்கையின்மேல்வைத்து மற்றொருகையால் முடியைத் தாங்கியும் நிளச்சிந்தித்து இரங்கி இங்ஙனமெல்லாம் அவ்விரவைக்கழித்துப் , பின்னாளில் பகைவரைச்சுட்டிப் படைக்கலங்கள் எடுத்த தன்வலியவிரலாலே அவர் தம்மையெல்லாம் வென்றமையின் தான் அணிந்த வஞ்சிமாலைக்கும் நல் வெற்றியினை நல்வெற்றியினை நிலைநிருத்திப், பின்னாளில் தன் மனவியைக்காணும் மகிழ்ச்சியால் பாசறையில் இனியதுயில் கொள்கின்றான் என்க.


'மண்டு' என்பதனை அமர் எண்பதனேடாதல் கசையென்பதனேடாதல் கூட்டி மிக்கபோர், மிக்கநசை என்க.தேம்பாய் கண்ணி -தேன் ஒழுகும் வஞ்சிமாலை. கடகம்- கைக்காப்பு. 'அரசு' என்பது இப்பாடின்கண் வந்த வஞ்சிபொருட்டொடர்புக்கு எழுவாயாக முன்னே கூட்டப்பட்டது பனிக்கும் - நடுங்கும், என்பது பகையரசர்கேட்டு நடுங்குதற்குக்காரணமானபோர்முரசு முழங்கும் பாசறையை.


(அய-பந்) பொழிப்புரை பொருட்பாகுபாட்டில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது; ஆண்டுக்காண்க.


எஉறு மஞ்ஞை-அம்புதைத்தமயில், இது மயிலின் சாயலினையுடைய தலைமகள் நடுக்கத்திற்கு உவமையாயிற்று . பாவை - வெண்கலத்தாற் செய்த பிரதிமை ; இதன்கையில்விளக்குகெரிய விடுவது அரசர்க்கு வழக்கம். முடங்கு இறை- கூடல்வாய்; கூரையின் இருபகுதிகள். ஒன்று பொருந்தும் மூட்டு வலன் நேர்பு ஆர்ப்ப - எய்திய வெற்றிக்குப்பொருந்தி ஒலிப்ப. அயிர்- நுண்மணல்,அஞ்சனம் -மை. முறிஇணர் - தளிருங் கொத்தும். தோடு ஆர்- இதழ் நிறைந்த, கானம் நந்திய