Page:Kalaikalanjiyam 1-30 pages.pdf/7

This page has been proofread.

அக்கெல்தாமா: ரத்தக் களம் என்னும் பொருள்படும் இக்கிரேக்கச் சொல் எருசலேமிலுள்ள ஓர் இடுகாட்டு நிலத்தைக் குறிக்கும். ஏசுகிறீஸ்து வைக் காட்டிக் கொடுப்பதற்கு யூதாசு இஸ்காரியத்து பெற்றூக்கொண்ட முப்பது வெள்ளிக் காசுகள் குற்றத் தொடர்பு உடையவை என்று கருதப்பட்டமையால் அப்பணத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. வெளீநாட்டார் வந்து எருசலெத்தில் இறந்துவிடின் அவ்வுடலங்களைப் புதைப்பதற்கு ஒரு பொது இடம் வேண்டுமென்று அம்முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அவ்வூர்க் கருமார்கள் ஒரு குயவனிடமிருந்து சிறிது நிலம் வாங்கின்ர். அதற்கே அக்கெல்தாமா என்பது பெயர். இப்பொழுது அங்கு எக்கொலைக் கனத்தையும் குறிக்க ஒரு பொதுச் சொல்லாக வழங்குகிறது. அக்டோபர்ப் புரட்சி: 1917-ல் ரஷ்யாவின் தலை நகராயிருந்த பெட்ரோகிராடில் நடந்த போல்ஷ்விக் புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர்.முதல் உலகயுத்தத்தில் ஜெர்மனியோடு போரிட்டுச் சோர்ந்து போன ரஷ்யப் படைகளும்,அக்காலத்தில் ரஷ்யாவில் ஆட்சிபுரிந்த வமிசத்தாரின் அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும் கொடுங்கோல் முறையாலும் பொறுமையீழந்த குடிமக்களும் இப்புரட்சிக்கு வழிதேடினர். அவ்வாண்டில் ரஷ்யப் பிரதமராயிருந்த கெரன்ஸ்கி புரட்கீக்காக அமைந்த சோவியத் கமிட்டிகளின் முழு நோக்கங்களையும் வலியையும் உணரவில்லை. ட்ராட்ஸ்கியின் தலைமையில் பெட்ரோகிராடில் கூடிய சோவியத் கமிட்டியானது ராணுவப் புரட்சிக் கமிட்டி ஒன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முழுவதும் லெனின்,ட்ராட்ஸ்கி ஓன்றை நியமித்துக்கொண்டு தங்களை யெதிர்த்த அரசாங்கச் சேனைகளை முறியடித்தது. கெரென்ஸ்கி ஓடிவிட்டார். அதிகாரம் முழுவதும் லெனின்,ட்ராட்ஸ்க்கி ஆகிய இரு வரிடம் வந்தது. அவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் தொடங்கிய புரட்சி நவமபர் 7 ஆம் தேதி சோவியத்திற்கு வெற்றீகரமாக முடிந்து ரஷ்யா முழுவதும் பரவிற்று. அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பழையகிரேக்கப் பஞ்சாங்கப்படி நவம்பர் ஏழாம் நாள் அக்டோபர் 25 ஆம் நாளாகையால் அப்புரட்சியை அக்டோபர்ப் புரட்சி என்பர். பார்க்க:சோவீயத் ரஷ்யா.வரலாறு. அக்பர[1542-1605]:ஜலாலுதீன் முகம்மது அக்பர் எனபதே இவனுடைய முழுப்பொயர்.அக்ப்ர் என்னும் சொல் மீகவும் பெருமையுடையவன் என்று பொருள்படும். ஷெர்ஷாவால் இவன் தந்தை ஹீமாயூன் இராச்சிய்த்தைவிட்டு விரட்டப்பட்டு சிந்துநதிக் கரையில் உள்ள அமரக்கோட்டை என்னும் இடத்தில் தங்கியிருந்தபோது இவன் பிறந்தான். இவனுக்குச் சிறு வயதில் படிப்பில் மனம் செல்லவீல்லை; என்றைக்குமே எழுத்துக் கற்றுக் கொள்ளவுமில்லை, வீளையாட்டுக்களிலும் வேட்டையாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தான். இவன் மனேவலியும் உடல்வலியும் ஒருங்கே பெற்றவன்.வீரத்தில் இவனை மகா அலெக்சாந்தருக்கு ஒப்பிடலாம். 1556-ல் ஹீமாயூமன் இறந்த பிறகு இவன் அமிர்தசரசுக்கு அருகிலுள்ள கலனுர் என்னுமிடத்தில் முடிசூட்டிக் கொண்டான். இவன் இளமையில் தனக்குத் துணைவனுயிருந்த பைராகானின் உதவியைக்கொண்டு சிக்கந்தர்ஷாவின் மந்திரியாயிருந்த ஹேமூ என்னும் இந்துவைத் தோற்கடித்துத் தன் அரசியல் நிலையை வலுப்படுத்திக்கொண்டான். 1560-ல் பைராம்காளை மக்காவிற்குப்போக ஏற்பாடு செய்து விட்டுப் பிறர் தலையீடு இன்றீ இராச்சிய ஆட்சியை மேற்கொண்டான்.இவன் தனது படை பலத்தாலும் அருந்திறமையாலும் வட இந்தியாவின் பெரும்பகுதியை வென்று மொகலாய சாம்ராச்சியத்தை ஏற்படுத்தினுன். இவன் 1562-ல் ஆம்பரைச் சேர்ந்த இந்து இளவரசி யொருத்தியை மணந்துகொண்டான். அவள் மகனுன சலீம் பிறகு ஜகாங்கீராக ஆட்சி புரிந்தான்.அக்பர் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒற்றுமையுண்டாக்க் முற்பட்டான்.மான்சிங் முதலில் ராஜபுத்திர வீரர்களைத் தனது அரசியல் அலுவலாளாகச் சேர்த்துக் கொண்டான். இவன் தனது தலைநகரத்தை ஆக்ராவீலிருந்து,தான் புதிதாக திருமாணீத்த பட்டேபூர் சிக்கீ என்னும் ஊருக்கு மாற்றீக்கொண்டான். இவனுக்குச் சிற்பம், இசைப் முதலிய அழகுக் கலைகளில் நல்ல பயீற்சி உண்டு. தான்சென் என்னும் சிறந்த இசைப் புலவன் இவன் அவையில் இருந்தான். அக்பர் ராஜா தோடர் மாலின் உதவியைகொண்டு அரசியல் நிருவாக முழுவதும் மாற்றியமைத்துச் செம்மைப் படுத்தினான். போர்க் காலத்திலும் அமைதிக் காலத்திலும் இவன் வெற்றி கண்டான். சமய ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு மண்டபம் கட்டினாமன். எம்மதத்தையும் இவன் ஆதரிக்கவில்லை. தின் இலக்கியப் புலவர்களை யாதரித்தான். இந்துக்களூக்கு மட்டும் விதிக்கப்பட்டு வந்த ஜசியா என்னும் இந்த வரியை நீக்கினான்.சதி என்னும் இந்த வழக்கத்தை யொழிக்க முதன்முதலில் ஏற்பாடு செய்தான். இவனுக்குச் சிற்சில சமயங்களில் வெகுளி மிகுந்து விடுவதுண்டு. ஆயினும் பொதுவாகக் கருணையுள்ளம் படைத்தவன்.இறுதீக் காலத்தில் சலீமின் நடத்தையால் இவனுஜக்குச் சிறிது மனவருத்தம் உண்டாயிற்று,ஆயீனும்,கடைசியில் அவனையே முடிசூட்டிக் கொள்ளுமாறு கூறீவீட்டுத் தனது 63 ஆம் வயதில்,1605-ல் இறந்தான்.இந்திய வரலாறு கண்ட தலைசிறந்த மன்னர்களில் இவன் ஒருவன். தே.வெ.ம. அக்பர் நாமா:இது அக்பரைக் குறித்து அபுல் பசல் தான் இறந்த 1602 வரையில் எழுதிய ஒரு வரலாற்று நூல். இது தைமூரிலிருந்து அக்பர் வரையிலுள்ள வமிசாவளியை எடுத்துரைக்கிறது. ஹீமாயூனையும் அக்பர் ஆட்சிக் கால வரலாற்றையும் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. இந்நூலில் அபுல்பசல் அக்பரை அளவிற்கு மிஞ்சிப் புகழ்ந்துள்ளான் என்று சிலர் கருதுவர்.ஆயினும் அத்தகைய புகழ்ச்சிக்கு அக்பர் ஓர் அளவிற்குப் பாத்திரமானவன் என்பதும் கருதத்தக்கது. அக்பர்பூர் உத்தரப்பிரதேச பைசாபாத் மாவட்டத்திலுள்ள நகராம்.தான்ஸ் நதியைக் கடக்க இவ்வூரில் பெரிய ரெயில் பாலம் ஒன்றுள்ளது. பழங்காலக் கோட்டையொன்றன் சிதைவுகள் உள்ளன.இங்ஙகரில் கைத்தறித் துணியும், பதனிட்ட தோலும் உற்பத்தியாகின்றன. அக்யூமுலேட்டர்: பார்க்க:மின்கலங்கள்.அக்ரிகோலா,நீயஸ் ஜீலியஸ்[37-93] பிரிட்டனில் ரோமானியர்களுகளுடைய கவர்னராக இருந்தவன். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சிபுரிந்தான். இவன் அந்நாட்டை மிக நல்ல முறையில் ஆட்சி புரிந்தான்.இவன் வடவேல்கிலிருந்த ஆதிக் குடிமக்களையும்,கிளைடு ஆற்றின் கடல்வாய்க்கு வடக்கேயிருந்த காலிடோனியர்களையும் வென்றான். வடபிரிட்டனில்கிளைடு கால்வாய்க்கும் போர்த் கால்வாய்க்கும் இடையே