Page:Thiruvasiriyam.pdf/3

This page has not been proofread.

4 திருவாசிரியம்- முன்னுரை. தங்களை வெளியிடுவித்து ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் பற்றினவனாகையாலே "பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறாமை என்று இவர் அபேக்ஷித்த போதே இவருடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டித் தந்தருளவில்லை. இவ்வாழ்வார் இந்த ஸம் ஸாரத்தை விட்டு விலகி ஒரு *நலமந்தமில்லதோர் நாட்டிலே போய்ச் சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப் பதற்காகவேயன்றி வேறொன்றுக்காகவன்றே; அந்த குணாதுபவ த்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச்செய்வோம் இங்கே தானே இவர் குணாநுபவம் பண்ணிக் களித்தாராய், அவ் வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப் பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்" என்று எம்பெருமான் திருவுள்ளம்பற்றித் தனது ஸ்வரூப தனது ஸ்வரூப ரூபகுண விபூதிகளைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வார் அவற்றைக்கண்டு பரமாநந்தம் பொலிய அநுபவிக்கிறார் - இத்திருவாசிரியத்தில். ஸம்ஸார ஸம்பந்தங் கழிந்து பரமபதத்திலே போனபின்பு அநுபவிக்கக்கூடிய எம்பெரு மானது மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கிருந்து கொண்டே சுருக்கமாக ஏழு பாட்டாலே அநுபவிக்கிறாராயிற்று. ..* -. ஆசிரியப்பாக்களினாலமைந்த இத்தில்யப்ரபந்தத்திற்குத் திரு ஆசிரியம் எனத் திருநாமம் வழங்கலாயிற்று. அடியொன்றுக்கு நான்கு சீராய் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும் மூன்றடிக் குக் குறையாமல் பலவடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ யென்னும் அசையுடன் முடிவதுஆசிரியப்பாவாம். இது -நேரிசை யாசிரியப்பா, நிலைமண்டில வாசிரியப்பா முதலிய நான்கு வகைகளை யுடையது; எல்லாவடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி முச்சீராய் முடி வது நேரிசையாசிரியப்பா. எல்லாவடிகளும் நான்கு சீராலேயே முடி வது நிலைமண்டிலவாசிரியப்பா. இப்பிரபந்தத்தில் 1,2,3,6-ஆம் பாசு ரங்கள் நேரிசையாசிரியப்பாக்கள்; 4, 5, 7- ஆம் பாசுரங்கள் நி மண்டில வாசிரியப்பாக்கள். அந்தாதித்தொடையால் அமைந்ததாம் இப்பிரபந்தம்.