Page:முல்லைப் பாட்டு.pdf/11

This page has not been proofread.

முல்லைப் பாட்டு

                           ஆராய்ச்சி
                        பாட்டினியல்பு

        முல்லைப்பாட்டு என்பதைப்பற்றித் தெரியவேண்டுவன
     எல்லாம் ஆராயும் முன், பாட்டு என்பதென்னை? என்று  
     ஆராய்ந்து அறிந்துகொள்ளல் வேண்டும். பிற்கால்த்துத்
     தமிழ்ப்புல்வர் பாட்டென்பது இன்னதென்றே அறியாமல்
     வினோத வினோதமாகச் சொற்களைக் கோத்துப் பொருள்
     ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார்.முற்காலத்துத் தமிழ்ப்
     புலவரோ பாட்டு என்பதன் இயல்பை இனிதறிந்து நலமுடைய
     செய்யுட்கள் பல்ப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் 
     செய்யப்பட்ட பாட்டின் இயல்போடு மாறுபட்டுப் பிற்காலத்தார் 
     பிறழப்பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு
     அறியாது மயங்குவராகலின் பாட்டு என்பது இன்னதென்று ஒரு 
     சிறிது விளக்குவாம்.
         
        உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு,விளங்கத்
     தோன்றும் அழகினையெல்லாம் தன்னுள்ளே நெருங்கப்பொதிந்து
     வைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படும் வண்ணம்
     தோற்றுவித்து,மாறுதல் இல்லா இனிய ஓசையுடன் ஒற்றுமைப்ப்ட்டு
     நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல்
     வேண்டும்.இன்னும் எங்கெங்கு நம் அறிவை தம்வயப் படுத்துகின்று
     பேரழகும் பேரொளியும் பெருங்குணமும் விளங்கித் தோன்றுகின்ற
     னவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும்.
     இதனை விரித்துக் காட்டு மிடத்துப்,பேரழகாற்சிறந்த ஓர் அரசி தான் 
     மேற்போர்த்திருந்த நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப் 
     பின்பு அதனைக் கீழேசுருட்டி எறிந்துவிட்டுத் துயில் ஒழிந்து ஒளி 
     விளங்கு ஈளிமுகங்