Page:முல்லைப் பாட்டு.pdf/61

This page has been proofread.

JANITA SUJI



                     விளக்க உரை குறிப்புகள்.                                
                                                    குக
                                                       

லப்படது. இப்பொருள் இவ்வடியினுல் இனிது பெறப்படு வதாகவும், இதனை உணராத நச்சினுர்க்கினியர் கஅ-வது வரி யிலுள்ள 'நல்லோர்' என்பதை எ-வது வரியிலுள்ள 'போகி' என்னும் வினையோடுகூட்டி இடர்ப்படும் இப்பொருளே கூறினுர்; அங்ஙனம் இடர்ப்பட்டுக்கூட்டிப் பொருளுரைக் கும்வழிப் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப் போன கார்ப்பருவவாவினைக் கண்டு ஆற்றுளான தலைமலளை ஆற்றுவித்தற்பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்றுவிக்கின்றர் என்பது நப்புதனுர் கருத் தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன் படைத் தலைவர் மாத்திரமே வீரீச்சி கேட்டற்கு உரியார் ஏனையோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனுர்க்குக் கருத்தன்னுல லானும், யாங்கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சிகேட்டலும் படைத்தலைவர் வாய்ப்புளும் இனிது பெறப்படுவதாக அவர் உரையாற் படைத்தலைவர் நன்னிமித் தம் ஒன்றுமே வலிந்து கொள்ளப்படுதலானும் நச்சினுர்க் கினியருரை யென்று மறுக்க.

    (ககூ-உஙு) 'நன்றலைவன், பகைவர் நாடெல்லாந் திறைப்

பொருளாகாக் காவர்ந்து கொண்டு, இங்ஙனந்னெடுத்த போர் வினையை இனிது முடித்து விரைவில் வருதல் உரைவில் வருதல் உண்மையே யாம்; மாயோய்! நீ நீன்துயாத்தை நீக்கு' என்று அவர் வற் புறுப்பவும் தலைமகள் ஆற்றலளாய் கலுழ்ச்சி மிக்கக் குவளைப்பூவின் இதழை ஒத்த கண்ணிலே முத்து முத்தாய் நீர் துளிப்ப வருந்தி என்க.

    இனி இங்கு இவ்வாறு உரை கூறுதலை நச்சினுக்கினி

யர் மறுக்கினுர். அவர் கூறிய மறுப்புவருமாறு:- 'முல்லை என்பது காதலனைப்பிரிந்த காதலி அவன் வருந்துணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாம். நப்பூதனுர் இதற்கு 'முல்லைப் பாட்டு' என்று பெயரமைத்தமையால் இதன் கண் அவ்வொ ழுக்கமே கூறப்படுதல் வேண்டும் என்பது துணிபு; இதற்கு