ஆழ்வார் திருவடிகளே சரணம்.
திருவாசிரியம்
இது மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் இரண்டாவதான பிரபந்தம். திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களும் நம்மாழ்வாருடைய திவ்யஸூக்திகளாம். இந்நான்கும், முறையே நான்கு வேதங்களின் ஸாரமாம். நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் இது ஆறாவதாகும். யஜுர்வேத ஸாரமுமாம்.
ஆழ்வார் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி, ‘தேவரீரை அநுபவிப்பதற்கு இடையூறான தேஹஸம்பந்தத்தை அறுத்துத் தந்தருளவேணும்' என்று ஸம்ஸார ஸம்பந்தநிவ்ருத்தியை அபேக்ஷித்தார் முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில். ஆழ்வார் அப்படி பிரார்த்தித்தபோதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக்கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்யப்ரபந்